நீ ஆபாச படம் பாத்துருக்க, ஃபைன் கட்டுறியா ஜெயிலுக்கு போறியா- கோவை இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி..!

published 1 year ago

நீ ஆபாச படம் பாத்துருக்க, ஃபைன் கட்டுறியா ஜெயிலுக்கு போறியா- கோவை இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் மோசடி..!

கோவை: ஆபாச படம் பார்த்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவலர்கள் போலும் நடமாடும் நீதிமன்றம் போலும் நடித்து பல்வேறு இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறித்த கும்பலை சைபர் கிரைம் போலிசார் கைது செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த சபரி என்ற இளைஞர் சக நண்பர்களுடன் சேர்ந்து சில இளைஞர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நீங்கள் ஆபாச படங்கள் பார்த்துள்ளீர்கள் உங்கள் மீது  நடமாடும் நீதிமன்றம் மூலம் மீது வழக்கு புனையப்பட உள்ளது இதில் இருந்து தப்பிக்க பணம் கொடுக்க வேண்டும் என மிரட்டியுள்ளார். மேலும் செல்போனில் பேசி கொண்டிருக்கும் போது காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி ஒலியையும் எழுப்பி உள்ளார். இதனை உண்மை என நம்பிய இளைஞர்கள் சபரி கூறிய வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி உள்ளனர். இந்த முறையை பயன்படுத்தி கொண்டு சபரி மற்றும் அவரது சக நண்பர்கள் பல இளைஞர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பணத்தை கொடுத்து பாதிக்கப்பட்ட சில இளைஞர்கள் சபரியின் குழு மீது சந்தேகமடைந்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலிசார் இதனை செய்த சபரி(22), ஜப்பான்(எ) ஆலன்(19), கிச்சா(எ) கிஷோர்(20), 
சின்னபகவதி(எ) பிரிவின் மோசஸ்(20), வெய்ட்டி(எ) அபிஷேக் குமார்(20), வடக்கு(எ) தனுஷ்குமார்(20) , தோனி(எ) பிரவீன் குமார்(20), அப்பு(எ) அகஸ்டின்(20), மனோஜ்(20)

ஆகிய 9 பேரை கைது செய்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe