காதலித்த போது எடுத்த புகைப்படங்களை கொண்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்- வாலிபர் கைது...

published 1 year ago

காதலித்த போது எடுத்த புகைப்படங்களை கொண்டு கல்லூரி மாணவிக்கு மிரட்டல்- வாலிபர் கைது...

கோவை: காதலித்த போது சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை சுந்தராபுரத்தை சேர்ந்தவர் 18 வயது கல்லூரி மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கோவையில் வேறொரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 3ம் ஆண்டு படிக்கும் குனியமுத்தூரை சேர்ந்த பிரியன்(19) என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கினர். அப்போது அவர்கள் இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டதாக தெரிகிறது. இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மாணவருடன் பழகக்கூடாது, பேசக்கூடாது என எச்சரித்தனர். இதனால் மாணவி மாணவருடன் பழகுவதை தவிர்த்து வந்தார். 

இந்த நிலையில், பிரியன் அந்த மாணவியை செல்போனில் தொடர்பு கொண்டு நீ என்னுடன் பழகுவதை நிறுத்தினால், நாம் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூகவலை தளத்தில் வெளியிடுவதாக மிரட்டி வந்தார். இதற்கிடையே நேற்று பிரியன் மாணவி படிக்கும் கல்லூரிக்கு சென்றார். வெளியே இருந்து செல்போனில் பேசி நீ என்னை வந்து பார்க்க வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து மாணவி பிரியனை பார்க்க சென்றார். அப்போது பிரியன் அந்த மாணவியை தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுத்தார். இது குறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe