கோவையில் பேருந்தில் 5 மாத குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற பெண்!

published 1 year ago

கோவையில் பேருந்தில் 5 மாத குழந்தையை தவிக்கவிட்டுச் சென்ற பெண்!

கோவை: கோவையில் பேருந்தில் 5 மாத குழந்தை தவிக்க விட்டு சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

திருச்சியை சேர்ந்த திவ்யா என்ற இளம்பெண் கோவையில்  தங்கி பட்டபடிப்பு படித்து வருகிறார். விடுமுறை நாளான இன்று தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் பேருந்தில் பயணித்துள்ளார்.

அப்போது பேருந்தில் அதிகமான  கூட்டம் இருந்ததால் பேருந்தில் பயணித்த அடையாளம் தெரியாத மற்றொரு பெண் ஒருவர் ஐந்து மாத குழந்தையை இருக்கையில் அமர்ந்திருந்த திவ்யாவிடம் கொடுத்துள்ளார். பின்னர் ரயில் நிலையம் வந்தவுடன் குழந்தையின் தாயை தேடி பார்த்த போது காணவில்லை.

இது குறித்து பேருந்தின் நடத்தினரிடம் கூறி தாயை பேருந்து முழுவதும் தேடி பார்த்தனர். அவர் இல்லாததை அறிந்து குழந்தையை ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து ஐந்து மாத குழந்தையை தவிக்க விட்டு சென்றது குழந்தையின் தாயா?அல்லது கடத்தி வரபட்டு குழந்தையை விட்டு சென்றுள்ளனரா ? என்ற கோணத்தில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe