வெள்ளலூர் பகுதியில் இரவு நேர பாட சாலை- அரசு அலுவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்...

published 1 year ago

வெள்ளலூர் பகுதியில் இரவு நேர பாட சாலை- அரசு அலுவலர்களுக்கு குவியும் பாராட்டுகள்...

கோவை: கோவை வெள்ளலூர் பகுதியில் எழை,எளிய மாணவ,மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அம்பேத்கர் இரவு நேர பாடசாலையை  அதை ஊரைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் ஒன்றிணைந்து துவக்கியது நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள வள்ளலார் காலனியில் ஏழை,எளிய பள்ளி மாணவ,மாணவிகளின் கல்வியை  ஊக்குவிக்கும் விதமாக டாக்டர் அம்பேத்கர் இரவு நேர பாட சாலை துவங்கப்பட்டது.
இதனை அதே கிராமத்தில் பயின்று தற்போது அரசு அலுவலர்களாக உள்ள கிராம நிர்வாக அதிகாரி, துணை வட்டாட்சியர்,ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினராக பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபீக் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

விழாவில் பேசிய பல் சமய நல்லுறவு இயக்க தலைவர் முகமது ரபீக், கல்வியின் முக்கியத்துவம் அதில் டாக்டர் அம்பேத்கரின் செயல்பாடு அவரின் தியாகங்கள் குறித்தும் இந்திய நாட்டின் ஜனநாயகம் உலக அளவில் பேசப்படுவதற்கு,டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலைப்பு சட்டமே என சுட்டி காட்டினார்..

தொடர்ந்து பேசிய அவர்,இன்றைய இளம் தலைமுறை மாணவர்கள் அண்ணல் காந்தி,மற்றும் அம்பேத்கரின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் என  கேட்டு கொண்டார்.குறிப்பாக கல்வி கற்பதன் அவசியம் குறித்து பேசிய அவர்,கல்வியோடு ஒழுக்கத்தையும் மாணவ,மாணவிகள் கற்று கொள்ள வேண்டும் எனவும்,இதற்கு ஆசிரியர்கள்,பெற்றோர்களின் பங்களிப்பு அவசியம் என குறிப்பிட்டார்.

இவர்களின் இம்முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe