மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு: ஊழியர்களுக்கு டாஸ்மாக் அனுப்பிய சுற்றறிக்கை என்ன?

published 1 year ago

மதுபானங்கள் விலை இன்று முதல் உயர்வு: ஊழியர்களுக்கு டாஸ்மாக் அனுப்பிய சுற்றறிக்கை என்ன?

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்த்தப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.

இந்நிலையில் விலை உயர்வை அமல்படுத்துவது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:

மதுபானங்களின் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு அதனடிப்படையில் மதுபானங்கள் விலை உயர்வானது இன்று முதல் அமலுக்கு வருகிறது. சாதாரண மற்றும் நடுத்தர ரக, உயர்தர ரக மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல பீர் வகைகளின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கி, ஒயின், டெகிலா மற்றும் உள்ளூர் ஒயின் விற்பனை விலையில் மாற்றமில்லை,

மாற்றியமைக்கப்பட்ட விலை பட்டியல் அனைத்து கடைகளுக்கும் அனுப்பப்படுவதை மாவட்ட மற்றும் மண்டல மேலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பிப்.1 முதல் விற்கப்படும் மதுபானங்கள் புதிய விலைப்படியே விற்பனை செய்ய வேண்டும்.

புதிய விலைப்பட்டியலை கடைகளில் வைக்க வேண்டும்.

ஜன.1 முதல் நடைபெற்ற விற்பனை விவரம் உள்ளிட்ட அனைத்து தரவுகளை சேமித்து வைக்க வேண்டும்.

புதிய விற்பனை விலையை மென்பொருள்களில் உள்ளீடு செய்ய வேண்டும்.

மேலும் இந்த பணிகளை மிகுந்த கவனத்துடன் மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள், கிடங்கு மேற்பார்வையாளர்கள் மேற்கொள்ள வேண்டும் .

தவறு நிகழ்ந்தால் அவர்களே பொறுபேற்க வேண்டும்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe