கோவையில் நடைபெற்ற பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக மகளிர் பிரதிநிதிகள் மாநாடு...

published 1 year ago

கோவையில் நடைபெற்ற பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக மகளிர் பிரதிநிதிகள் மாநாடு...

கோவை: கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான பாஜக மகளிர் பிரதிநிதிகள் மாநாடு இன்று 
நடைபெற்றது.

இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் ஹரியானா நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த மாநாட்டில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மகளிர் அணியின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கோவையில் பாஜகவின் மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. ஹரியானாவின் சிர்சா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சுனிதா துக்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாளை நீலகிரி தொகுதியின் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதுபோல வரும் தேர்தலுக்கு மகளிர் அணியினை தயார் செய்யும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் பாராளுமன்ற தேர்தலில் மகளிர் அதிக அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மகளிர் அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம் அரசியலில் மகளிரின் பங்களிப்பு மேம்படுத்தப்படுவதோடு, அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அதிக அளவில் மகளிர் வேட்பாளராக போட்டியிட வேண்டும் என காட்சிக்கு வலியுறுத்தியுள்ளோம். அதற்கான தகுதியான மகளிரை தேர்வு செய்தும் வருகிறோம்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார்.

கட்சி சார்பில் யாரை தூதாக அனுப்புகிறார்கள் என்பது கட்சிக்கு தான் தெரியும் எங்களால் கருத்து கூற முடியாது.

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு பணி செய்வதற்காக அரசியல் களத்திற்கு வருவதாக கூறுகிறார். அவரை வரவேற்கிறோம்.

நாட்டு மக்களை வடக்கு, தெற்கு என பிரிக்காமல் அனைவரையும் ஒன்றிணைப்பதற்காகவே பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.

கட்சியின் தலைமை தான் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யும்.

மகளிர் அணி மாநாட்டினை தொடர்ந்து கட்சியின் பல்வேறு அணிகளின் மாநாடு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என ஆதரவளிக்கும் அனைத்து கட்சிகளோடும் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது.

பத்தாண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்ததோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக-விற்கு வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் எங்களோடு இணைய விரும்பும் தமிழக அரசியல் கட்சி யாராக இருந்தாலும் வரவேற்கிறோம்' என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe