திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் மத்திய அரசு!

published 1 year ago

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும் மத்திய அரசு!

திருமணம் ஆகாத இளைஞர்களுக்கு மத்திய அரசின் விமானப்படையில் வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விமானப்படையில் 'அக்னிவீர் வாயு' பிரிவில் ஆள் சேர்ப்பு நடைபெற உள்ளது.

இந்த பிரிவில் பணிபுரிய விரும்புவோர் ஜனவரி 2-ம் தேதி 2004 ஆம் ஆண்டு முதல் ஜூலை 2-ஆம் தேதி 2007 ஆம் ஆண்டு வரை பிறந்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரருக்கு திருமணம் ஆகி இருக்கக் கூடாது. இந்தப் பணியில் விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் பிப்ரவரி மாதம் 11ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இணைய வாயிலாக தேர்வு வரும் மார்ச் மாதம் 17ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe