வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி- கவுண்டம்பாளையம் விஏஒ மீது புகார்...

published 1 year ago

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி- கவுண்டம்பாளையம்  விஏஒ மீது புகார்...

கோவை: கோவை கவுண்டம்பாளையம் விஏஒ வாக இருப்பவர் லோகநாயகி. இவர் இதற்கு முன்பு திருவாரூர் மாவட்டத்தில் விஏஒ வாக இருந்த போது வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இரண்டரை லட்சம் ரூபாயை பெற்று கொண்டு ஏமாற்றி விட்டதாக திருவாடானை பகுதியை சேர்ந்த ஹென்றி கஸ்பார் என்ற இளைஞர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், 2021ம் ஆண்டு லோகநாயகி திருவாரூர் மாவட்டத்தில் விஏஒ வாக இருந்த போது அவரும் அவரது மகன் எழில் பிரபாகரன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை பெற்று கொண்டு தற்போது வரை வேலைக்கும் அனுப்பாமல் பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருவதாக கூறினார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அவர்கள் திடீரென கிளம்பி கோவைக்கு வந்து விட்டதால் பல நாட்களாக அவர்களை தொடர்பு கொள்ள முடியாமல் ஒருவழியாக லோகநாயகி கோவையில் பணிபுரிவதை தெரிந்து கொண்டு இங்கு வந்ததாகவும் அவரிடம் தான் கொடுத்த பணத்தை பலமுறை கேட்டும் தர மறுத்ததாக கூறினார்.

பின்னர் இது பற்றி கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில் அவர்கள் கவுண்டம்பாளையம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்ததாகவும்  ஆனால்  கவுண்டம்பாளையம் போலிசார் லோகநாயகி விஏஒ வாக இருப்பதால்  இது குறித்து தாங்கள் விசாரணை நடத்த முடியாது என கூறி விட்டதாக தெரிவித்தார். மேலும் கோட்டாட்சியர் அலுவலகத்தில் லோகநாயகி மீது நடவடிக்கை எடுக்க இயலாது என கூறிவிட்டதாக தெரிவித்தார்.

3 வருடங்களுக்கும் மேலாக தனது பணத்தை பெறுவதற்கு போராடி வருவதாக கூறிய அவர், மாவட்ட ஆட்சியராவது விஏஒ லோகநாயகி யிடம் இருந்து தனது பணத்தை பெற்று தந்து அவர் மீதும் அவரது மகன் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe