கோவையில் உள்ள தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இடிக்கப்படுகிறது...

published 1 year ago

கோவையில் உள்ள தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இடிக்கப்படுகிறது...

கோவை: கோவையில் உள்ள தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான டிலைட் திரையரங்கம் இடிக்கப்பட்டு வருவது திரை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள டிலைட் திரையரங்கம் தான் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட முதல் நிரந்தர திரையரங்கமாகும். 1914ம் ஆண்டு கட்ட இந்த திரையரங்கம் நூற்றாண்டு விழா கண்டும் செயல்பட்டு வந்தது. இந்தியாவில் எடுக்கப்பட்ட பெரும்பாலான திரைப்படங்கள் இங்கு தான் திரையிடப்பட்டது. இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஆங்கில திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன. தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இது தான் என்பதால் புகழ்பெற்ற இயக்குர்களின் அனைத்து திரைப்படங்களும் இங்கு திரையிடப்பட்டுள்ளன.

இந்த திரையரங்கம் கோவையின் முக்கியமான அடையாளமாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக திரையுலகத்தினருக்கு முக்கியமான அடையாளமாகவும் திகழ்ந்துள்ளது. திரையரங்கம் துவங்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும், பல திரையங்குகள் கட்டப்பட்டு நவீனமயம் ஆக்கப்பட்டும் இந்த திரையரங்கில் பெரும்பான்மையான வசதிகள் மாற்றம் செய்யப்படவில்லை. கருப்பு வெள்ளை திரைப்படங்களில் துவங்கி வண்ணப்படங்கள் என அனைத்து படங்களும் இங்கு திரையிடப்பட்டு வந்த நிலையில் புதிய புதிய திரையரங்குகள், நவீன தொழில்நுட்பங்கள் வர வர இந்த திரையரங்கிற்கு வருவதை மக்கள் குறைத்து விட்டனர். ஒரு கட்டத்தில் இந்த திரையரங்கிற்கு வருவதையே நிறுத்தி விட்டனர். இருப்பினும் 1980, 90 களில் வெளியான படங்கள் குறையந்த பார்வையாளர்களுடன் இங்கு திரையிடப்பட்டு வந்தது.

தற்போது இந்த புகழ்பெற்ற திரையங்கை இடிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது இந்த திரையரங்கில் படங்களை பார்த்து ரசித்த ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. இந்த இடத்தில் வணிக கட்டிடம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த திரையரங்கில் திரைப்படத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் கூறுகையில் இந்த திரையரங்கை இடிப்பது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அரசோ அல்லது திரையுலகத்தினரோ முன்வந்து இந்த திரையரங்கிற்காக நினைவு சின்னம் ஒன்றை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe