கோவை கார் குண்டுவெடிப்பு; 12 இடங்களில் என்.ஐ.ஏ., தீவிர சோதனை!

published 1 year ago

கோவை கார் குண்டுவெடிப்பு; 12 இடங்களில் என்.ஐ.ஏ., தீவிர சோதனை!

கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகம் முழுவதும் 8 மாவட்டங்களிலும், கோவையில் 12 இடங்களிலும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2022ம் ஆண்டு கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து NIA அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களையும் சந்தேகப்படுபவர்களையும் அழைத்து வந்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அல் அமீன் காலனியை சேர்ந்த  ஏசி மெக்கானிக் ஆன ரகுமான் என்பவர் இல்லத்தில் இன்று அதிகாலை முதல் NIA அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி மொத்தம் 12 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அரபிக் கல்லூரிகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் இன்றும் சோதனைகள் நடைபெற்று வருகிறது.

சென்னை, மதுரை, திருநெல்வேலி என மொத்தம் 8 மாவட்டங்களில் என்.ஐ.ஏ., சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe