வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி.. எப்போது முதல்?

published 1 year ago

வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி.. எப்போது முதல்?

கோவை: கோவை மேற்கு மலை தொடர்ச்சி பகுதியான பூண்டி பகுதியில் உள்ள 7 வது  உச்சி மலையில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் காட்சியளிக்கிறார்.

ஒவ்வொரு வருடமும் சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் மலையில் வீற்றிருக்கும் வெளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை வனத்துறை அனுமதி அளித்து வந்தது.இதனிடையே கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவர் வெள்ளியங்கிரி மலை ஏற  பிப்ரவரி முதல் மே மாதம் வரை 4 மாதங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 6ஆம் தேதி இதனை விசாரித்த நீதிபதி பிப்ரவரி முதல் மே வரை 4 மாதங்களுக்கு வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வனத்துறைக்கு உத்தரவிட்டது.

அதன் அடிப்படையில்  வனத்துறை முன்னிலையில் வெள்ளியங்கிரி மலை ஏற கதவுகள் திறக்கப்பட்டது. இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe