தேர்தல் பத்திரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை- கோவையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...

published 1 year ago

தேர்தல் பத்திரங்களுக்கு விதிக்கப்பட்ட தடை- கோவையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்...

கோவை: தேர்தல் பத்திரங்கள் செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்பு கொடுத்தும் பட்டாசு வெடித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறும்போது, கார்ப்பரேட் நிறுவனங்களின் லஞ்சம், முறைகேடான நிதி தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்று வரும் அரசியல் கட்சிகள் குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற மறுத்த ஒரே இயக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்தான். தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஆயிரக்கணக்கான கோடியை பாஜக திரும்பக் கொடுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் 5 அமர்வு கொண்ட நீதிபதிகள் சரியான முறையில் தீர்ப்பு வழங்கியதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 

நீதிமன்றம் அறிவித்த தேதிக்குள் நன்கொடை பெற்ற அனைத்து கட்சிகளும் நிதியை திரும்பி கொடுக்க வேண்டும் என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்மநாபன், சிஐடியு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் கனகராஜ் மற்றும் அஜய் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe