கடன் வாங்கியவர்கள் சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு...!

published 1 year ago

கடன் வாங்கியவர்கள் சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம் - கோவை ஆட்சியர் அறிவிப்பு...!

கோவை: கடன் பெற்றவர்கள் 9 சதவீத சலுகை வட்டியில் கடனை திருப்பி செலுத்தலாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி. நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள். தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் கடன் பெற்றவர்கள் நீண்ட கால கடன் நிலுவைகளை 9 சதவீத சலுகை வட்டியில் திருப்பி செலுத்தலாம்.

அந்த கடன்களுக்கான கூடுதல் வட்டி மற்றும் அபராத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ள சிறப்பு கடன் தீர்வுத்திட்டத்தை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

மேலும், சிறுவணிகம், போக்குவரத்து, கைத்தறி, விசைத்தறி, தொழில், வாணிபம், வீடு கட்டுதல், வீட்டு அடமானம், 2021-ம் ஆண்டில் தள்ளுபடி கிடைக்கப்பெறாத தகுதியான மகளிர் சுயஉதவிக்குழு, ஆண்கள் சுயஉதவிக்குழு மற்றும்

கூட்டுப்பொறுப்புக்குழு கடன்கள் இதற்கு பொருந்தும்.

அதே போன்று தாட்கோ, டாம்கோ, டாப்செட்கோ, வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மூலம் வேளாண் விளைபொருட்கள் கொள்முதல், விற்பனை செய்த வகையில் உறுப்பினர்களிடம் இருந்து வர வேண்டிய இனங்கள் ஆகியவைகளுக்கு இந்தகடன் தீர்வுத் திட்டம் பொருந்தும்.

31.12.2022 அன்று கடனைத் திருப்பிச்செலுத்த வேண்டிய காலக்கெடு முடிவடைந்து, தவணை தவறி அரசாணை வெளியிடப்பட்ட நாளில் நிலுவையில் உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும்.

குறிப்பாக, 31.12.2022- க்கு பிறகு கடன் தவணை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு உள்ள பண்ணைசாராக் கடன்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கூட்டுறவுச் சங்கங்களில் செலுத்த வேண்டிய கடன் நிலுவையில் 25 சதவீத தொகையை அரசாணை வெளியிடப்பட்ட நாளில் இருந்து (13.12.2023)3 மாதத்திற்குள் அடுத்த மாதம் (மார்ச்) 12-ந் தேதிக்குள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு சங்கம் அல்லது வங்கியில் செலுத்த வேண்டும்.

மீதி 75 சதவீத தொகையை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நாளில் இருந்து 6 மாதத்திற்குள் அதிகபட்சமாக 6 தவணைகளுக்குள் செலுத்த வேண்டும்.

மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த 15.153 நபர்களுக்கு தபால் மூலம் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இதில் சந்தேகங்கள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட சங்கங்களை தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe