மக்களோடு கூட்டணி கோவையில் அதிமுக போஸ்டர்...

published 11 months ago

மக்களோடு கூட்டணி கோவையில் அதிமுக போஸ்டர்...

கோவை: மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க தயார் என கோவையில் அதிமுக வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாளை முன்னிட்டு யார் கூட்டணி வந்தாலும் கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் என கோவையில் அம்மா பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அணியினர் தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் வருகின்ற 24ஆம் தேதி ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு நாடாளுமன்றத் தேர்தலை சுட்டிக்காட்டியும் கூட்டணியை குறிப்பிட்டும் அம்மா பேரவை கோவை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த போஸ்டரில் 76 வது பிறந்தநாள் காணும் புரட்சித்தலைவியை(ஜெயலலிதா) வணங்குகிறோம் எனவும், "தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் எத்தனை கூட்டணியோடு யார் வந்தாலும் எங்களோடு யார் கூட்டணி வந்தாலும் கூட்டணியோடு இல்லையேல் மக்களோடு கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்க நாங்கள் தயார் நாளையும் நமதே! நாற்பதும் நமதே! என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி, எஸ்.பி.வேலுமணி, மற்றும் அம்மா பேரவை கோவை தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe