கோவையில் கட்டுமான நிறுவனத்தில் ரூ.5.23 லட்சம் திருடியதாக சைட் இன்ஜினியர் மீது வழக்குப்பதிவு...

published 11 months ago

கோவையில் கட்டுமான நிறுவனத்தில் ரூ.5.23 லட்சம் திருடியதாக சைட் இன்ஜினியர் மீது வழக்குப்பதிவு...

கோவை: கோவையில் கட்டுமான நிறுவனத்தில் ரூ.5.23 லட்சம் திருடியதாக சைட் இன்ஜினியர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை சாயிபாபாகாலனி ஆர்.கே.புரத்தில் கட்டுமான நிறுவன அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் கோவையில் பல இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சைட் இன்ஜினியராக கடலூர் திருப்பாதிரைபுலியூரை சேர்ந்த அய்யப்பன் என்பவர் வேலை பார்த்தார். 

இந்நிலையில், அவரது நடவடிக்கை காரணமாக நிறுவனம் அவரை சில நாட்களுக்கு முன்பு வேலையில் இருந்து நீக்கியது. இந்நிலையில், நேற்று முன்தினம் நிறுவன மேலாளர் பெரியநாயக்கன்பாளையம் ஆனந்தா நகரை சேர்ந்த ரமேஷ்(32), அலுவலகத்தை திறந்தார். அப்போது அங்கிருந்த அலமாரி உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே வைத்திருந்த ரூ.5,23,700 ஐ காணவில்லை. 

சைட் இன்ஜினியராக வேலை பார்த்த அய்யப்பன் பணத்தை திருடி சென்று விட்டதாக நிறுவனத்தினர் சார்பில் சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் ரூ. 5.23 லட்சம் திருடியதாக சைட் இன்ஜினியர் அய்யப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe