மத்திய அரசை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

published 11 months ago

மத்திய அரசை கண்டித்து கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

கோவை: கட்டுமான தொழிலாளர் மத்திய சட்டத்தை கலைக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் AITUC கட்டட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு AITUC கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர், கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு தேவையான அளவு நல வரியை 5 முழுப்பாடாக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும், நலவாரியம் மூலமாக மருத்துவ ESI வசதி, காப்பீடு, PF பலன்களை வழங்க வேண்டும், 

ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய அரசை கண்டித்தும் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe