கோவையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு...

published 11 months ago

கோவையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தவர் கையை அறுத்து கொண்டதால் பரபரப்பு...

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த நபர் கடன் தொல்லையால் கையை அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோவை பி என் புதூர் பகுதியைச்சேர்ந்தவர் நிவாஸன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாளான இன்று மனு அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார்.

 

இந்த நிலையில் கொரோனா காலத்தில் வாங்கிய  சிறு கடனை அடைப்பதற்காக மேலும் கடன் வாங்கி கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும் , வாழ்வாதாரத்தை முற்றிலும்கேள்விக்குறியாகிவிட்டதாகவும் ,இந்த கடனை அடைக்க போதிய வருமானம் இல்லை என்பதால் ..இதனை உடனடியாக சரி செய்ய தன் தந்தையின் சொத்தை முழுமையாக தர வேண்டும் எனவும் தன் தந்தை இறந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டதாக கூறி கொண்டே  மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் வைத்து கையை அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி பந்தய சாலை காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe