கோவையில் 130 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்...

published 11 months ago

கோவையில் 130 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள்...

கோவை: கோவையில் இன்று 130 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் முத்துசாமி பயனாளிகளுக்கு வழங்கினார்.

 

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கம், ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகம், கண்ணம்பாளையம் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற்ற இலவச வீட்டு மனை பட்டாக்கள், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி 3399 பயனாளிகளுக்கு 130.36 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகராட்சி ஆணையாளர், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர், மேயர் உட்பட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe