குப்பையில்லா கோவை நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...

published 11 months ago

குப்பையில்லா கோவை நிகழ்ச்சி- மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு...

கோவை: கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் "குப்பையில்லா கோவை" என்ற விழிப்புணர்வு மற்றும் களப்பணி நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். 

 

இந்நிகழ்ச்சி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நடைபெற்றது. இதில் தூய்மை பாரத இயக்கம் மூலம் ஊராட்சி மன்ற தலைவர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊக்குவிப்பாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்களுக்கான "குப்பை இல்லா கோவை" குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நெகிழி ஒழிப்பு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe