ஏழைகளுக்கு பேரிடி! ஒரே நாளில் எகிறியது தங்கம் விலை!

published 11 months ago

ஏழைகளுக்கு பேரிடி! ஒரே நாளில் எகிறியது தங்கம் விலை!

தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்து. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத நிலையில் இன்றும் உயர்ந்துள்ளது ஏழை நடுத்தர வர்க்கத்தினருக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து கிராம் ரூ.6 ஆயிரத்தைக் கடந்து விற்பனையாகி வருகிறது.

தேர்தல் காலம் நெருங்குவதால், தங்கத்தை விற்று பணமாக்குவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும், இதனால் நாடு முழுவதும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்து வந்தனர்.

ஆனால், அனைவரது கணிப்பையும் பொய்யாக்கும் விதமாக பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலிருந்து தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.85 அதிகரித்து வரலாற்றில் இல்லாத விதமாக பவுன் ரூ.6,015க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று பவுனுக்கு ரூ.200 அதிகரித்தது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.400 விலை அதிகரித்து ஒரு கிராம் ரூ.6,090க்கும், பவுன் ரூ.48,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இப்படியே சென்றால் தங்கம் வாங்குவது கனவாகவே மாறிவிடும் என்றும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe