கோவையில் மாட்டுவண்டி போராட்டம் நடத்திய அனைத்து கட்சியினர்...

published 11 months ago

கோவையில் மாட்டுவண்டி போராட்டம் நடத்திய அனைத்து கட்சியினர்...

கோவை: கோவை ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்படாமல் போத்தனூர் , இருகூர் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் 6 ரயில்கள் கேரளாவிற்கு இயக்கப்படுகிறது. 


 

இந்த ஆறு ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்க வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் ரயில்வே துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் அந்த ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வலியுறுத்தி இன்று அனைத்து கட்சி சார்பில் மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.

கோவை ரயில் நிலையம் எதிரே இருந்து அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் மாட்டு வண்டிகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தியபடியும் முழக்கங்களை எழுப்பியவாறும் ரயில் நிலையம் வந்து மனு அளித்தனர்.

 

இந்த போராட்டத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் உட்பட, திமுக ,மதிமுக, சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு கட்சியினர்  பங்கேற்றனர்

இந்த  போராட்டத்திற்கு இடையே திமுகவினர் சிலர் கைகளில் வடைகளுடன் வந்து மோடி சுட்ட வடை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe