துபாயில் ரவுண்ட் அடிக்கும் விக்கி-நயன்.. புகைப்படத் தொகுப்பு...!

published 11 months ago

துபாயில் ரவுண்ட் அடிக்கும் விக்கி-நயன்.. புகைப்படத் தொகுப்பு...!

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நயன்தாரா தனது கணவர் மகன்களுடன் துபாயில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. சினிமா மட்டுமின்றி பிசினஸிலும் கொடிகட்டிப் பறக்கும் நயன்தாரா கடந்த 2022-ம் ஆண்டு விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார்.

இந்த ஜோடிக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளன. இந்நிலையில் நயன்தாராவின் சமூக வலைதல பக்கத்தில் அவர் பின்தொடர்பவர்கள் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் இல்லாததை சில தினங்களுக்கு முன் நெட்டிசன்கள் கண்டனர். 

இதனிடையே நயன்தாரா பதிவிட்ட புதிரான பதிவும் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இதையடுத்து விக்னேஷ் சிவனை, நயன்தாரா ‘அன்பாஃலோ’ செய்துவிட்டதாகவும் இருவருக்கும் பிரச்சனை என்றும் வதந்தி பரவியது. 

இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே நயன்தாராவின் பக்கத்தில் சிலருடைய ஃபாலோயர்கள் பெயர் காண்பிக்கப்படவில்லை என்றும் தற்போது அந்தப் பட்டியலில் விக்னேஷ் சிவன் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது

என்றும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதி தங்கள் விடுமுறையை ஜாலியாக செலவிடத் திட்டமிட்டு துபாய் சென்றுள்ளனர்.

இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அடுத்தடுத்து போட்டோக்களை இருவரும் தங்கள் சமூக வலைதலங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இருவரும் First Grand Prix experience என்று  புகைப்படங்களை x மற்றும் instagram தளங்களில் பகிர்ந்து

தங்கள் ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe