கோவை கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்கனுமா? அவங்களே எழுதித்தராங்க..!

published 11 months ago

கோவை கலெக்டர் ஆபீசில் மனு கொடுக்கனுமா? அவங்களே எழுதித்தராங்க..!

கோவை; கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இந்நாளில் நூற்றுக்கணக்கான மக்கள் அவர்களது மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிப்பார்கள்.

இவ்வாறு மனுக்களை அளிக்க வரும் பெரும்பாலான மக்கள் எவ்வாறு மனு எழுதுவது என தெரியாமல் குழப்பமடைகின்றனர். அப்படிப்பட்ட மக்களுக்கு மனுக்களை எழுதி தருவதற்கு தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரந்தோறும் ஆட்சியர் அலுவலகம் மனுக்களை பொதுமக்களுக்கு இலவசமாக எழுதி தருகின்றனர்.

தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் மனுக்களை எழுதி தருவதால் பெரும்பாலான மக்களுக்கு அது தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியில் பணம் கொடுத்து மனுக்களை எழுதி செல்கின்றனர்.

இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தின் வெளியில் இருப்பவர்கள் மனுக்கள் எழுதுவதற்கு அதிகமான பணம் கேட்பதாக கடந்த சில நாட்களாக புகார்கள் எழுந்தன. இதனிடையே அலுவலகத்திற்குள் இலவசமாக எழுதித்தரும் தன்னார்வலர்களை மாவட்ட நிர்வாகம் தற்பொழுது ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே அமர்த்தி இலவசமாக பொதுமக்களுக்கு மனுக்களை எழுதிக் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இதனால் படிப்பறிவு இல்லாத பொதுமக்களும் பயனடைந்துள்ளனர்; “மனு எழுதியாச்சு.. மனுக்களுக்கு திர்வு கிடைப்பதே முழுமையான பயனாக இருக்கும், இதற்கு ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர் பொதுமக்கள். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe