வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை வழங்கும் விழா...

published 11 months ago

வேளாண் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை வழங்கும் விழா...

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகளுக்கு மலபார் சேரிடபில் டிரஸ்ட் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாட பிரிவில் பயிலும் மாணவிகளுக்கும், அரசு கல்லூரி மற்றும் அரசு பள்ளி மாணவிகளுக்கும் மலபார் சேரிடபில் டிரஸ்ட் மூலம் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்திலுள்ள அண்ணா அரங்கத்தில்  நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர்  தமிழ்வேந்தன், தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர், மலபார் கோல்டு அண்ட டைமண்ட்ஸ்நௌஷாத் ஆகியோர் விழாவினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

கோயம்புத்தூர் மலபார் கோல்டு அண்ட டைமண்ட்ஸ் வர்த்தக மேலாளர் தேவராஜ் கூட்டத்தினரை வரவேற்றார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், மலாபர் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் நடத்தும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இக்கல்வி உதவித்தொகை திட்டத்தின் மூலம் சுமார் 750 மாணவிகள் பயனடைந்துள்ளனர் என்று கூறினார். ஒரு பெண்ணுக்கு கல்வி அளித்தால் அந்த குடும்பமே உயர்வடையும் என்று கூறி இத்திட்டம் மேலும் வளர தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும், மலபார் கோல்டு அண்ட டைமண்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் மற்றும் அந்நிறுவனத்தினால்
பயன்பெற்ற பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் உரையாற்றினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe