சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை!

published 11 months ago

சென்னை-கோவை இடையே கூடுதல் விமான சேவை!

கோவை: சென்னை மற்றும் கோவை இடையே கூடுதலாக இரண்டு விமான சேவைகள் தொடங்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது,

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த பெரிய நகராக கோவை உள்ளது. கோவையில் இருந்து தினந்தோறும் விமானம் மூலமாக ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயணம் செய்த் வருகின்றனர்.

இதனிடையே கோவை விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் சென்னை-கோவை இடையே புதிய இரண்டு விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னையில் இருந்து இரவு 9 மணிக்கும், கோவையில் இருந்து காலை 6:30 மணிக்கும் விமான சேவை 

வரும் 31ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe