வடவள்ளி அருகே வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு

published 11 months ago

வடவள்ளி அருகே வீடு புகுந்து தங்க நகைகள் திருட்டு

கோவை: கோவையில் வீடு புகுந்து 9 பவுன் நகை திருட்டு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை வடவள்ளி நவாவூர் பிரிவை சேர்ந்தவர் தணிகாசலம் மனைவி செல்வராணி(55). இவரது வீட்டில் கடந்த ஆண்டு கோவை கல்வீரம்பாளையம் மாகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சரண்யா(35) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 18ம் தேதி செல்வராணி குடும்பத்தினருடன் வெளியூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஒரு வாரம் கழித்து வீடு திரும்பினார். அப்போது வீட்டு பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அவர் வீட்டில் வேலை செய்த சரண்யாவிடம் விசாரித்தார். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தததோடு வேலைக்கு வருவதையும் நிறுத்தி கொண்டார். இதனால் அவர் மீது சந்தேகம் கொண்ட செல்வராணி வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe