அதி நவீன தொழில் நுட்பங்களுடன் அரசு கேபிள்...! நலவாரிய தலைவர் கோவையில் பேட்டி

published 11 months ago

அதி நவீன தொழில் நுட்பங்களுடன் அரசு கேபிள்...!  நலவாரிய தலைவர் கோவையில் பேட்டி

கோவை: கேபிள் டிவி ஆபரேட்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான நலவாரியத்தினை நிறைவேற்றி "தமிழ்நாடு கேபிள் டிவி மற்றும் தொழிலாளர்கள் நல வாரியம்" என அறிவித்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கோவை மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

இதற்கிடையே நல வாரிய தலைவர் ஜீவா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நலவாரிய உறுப்பினர்களை சந்தித்து வருகிறார்.

அதன்படி, கோவை வந்த அவர் மாவட்டத்தில் உள்ள 5 துணை கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்தார். மேலும் உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களும் மற்றும் தொழிலாளர்களும் நலவாரியத்தில் உறுப்பினராக சேர https://www.tnctvwb.in இணையதளம் மூலம் உறுப்பினராக இணைந்து கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, அதி நவீன தொழில் நுட்பங்களுடன் விரைவில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவைகள் பொது மக்களுக்கு வழங்கப்படும். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி சிக்னல் தடையின்றி செயல்பட தேவைப்படும் தரைவழி ஒளிபரப்பு மற்றும் அதற்குண்டான உபகரணங்கள் உடனடியாக வழங்கப்படும்.

கேபிள் டிவி ஒளிபரப்பு சம்பந்தமான குறைகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக தெரிவிக்கலாம். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் மிகக் குறைந்த கட்டணத்தில் முதல்வரால் வழங்கப்பட உள்ளது.’’ என்றார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe