First On: மோடி வருகை; கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்...!

published 11 months ago

First On: மோடி வருகை; கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம்...!

 

கோவை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு:

கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு பிற்பகல் 2

 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

கனரக வாகனங்கள் நாளை காலை 6 மணி முதல் மற்றும் 19ம் தேதி காலை 11 மணி வரை இரண்டு நாட்கள் நகர எல்லைக்குள் வர அனுமதி இல்லை.

அவினாசி சாலை

அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து சத்தி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு. காந்திபுரம் செல்லும் வாகனங்கள் தொட்டிபாளையம் பிரிவு, காளப்பட்டி நால் ரோடு, சரவணம்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

அவிநாசி சாலை வழியாக மாநகருக்குள் வந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு செல்பவர்கள் எல் அண்ட் டி பைபாஸ், சிந்தாமணி புதூர், சிங்காநல்லூர் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

நாளை மதியம் 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவினாசி சாலை SNR சந்திப்பு வழியாக 100 அடி ரோடு மேம்பாலம், சிவானந்தா காலனி மேட்டுப்பாளையம் சாலை, டி.பி ரோடு. புரூக் பீல்ட்ஸ் ரோடு, அவினாசி ரோடு பழைய மேம்பாலம் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

19ம் தேதி காலை 7 மணி முதல் 11 மணி வரை அவிநாசி சாலையை அனைத்து வாகன ஓட்டிகளும் தவிரக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திருச்சி சாலை

திருச்சி சாலையிலிருந்து சத்தியமங்கலம் மற்றும் மேட்டுப்பாளையம் சாலைக்கு செல்பவர்கள் இராமநாதபுரம் சந்திப்பு, லட்சுமி மில், மகளிர் பாலிடெக்னிக் சந்திப்பு, ஆவாரம்பாளைம் ரோடு, கணபதி வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

ஹோப் காலேஜ், பீளமேடு மற்றும் எஸ்.என். ஆர் ஆகிய பகுதிகளைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

திருச்சி சாலையிலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு செல்பவர்கள் வழக்கமான பாதையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சத்தி சாலை

சத்தி சாலையிலிருந்து கணபதி, காந்திபுரம் வழியாக அவிநாசி ரோடு செல்பவர்கள் சரவணம்பட்டி சோதனை சாவடியிலிருந்து இடது புறம் திரும்பி காளப்பட்டி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

சத்தி சாலையிலிருந்து திருச்சி ரோடு, பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்பவர்கள் கணபதி, ஆவாரம்பாளையம் மேம்பாலம், மகளிர் பாலிடெக்னிக், லட்சுமி மில் சந்திப்பு, கிட்னி சென்டர் மற்றும் இராமநாதபுரம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

இதையும் பார்க்கலாம்:  தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்ன? கோவை கலெக்டர் பேட்டி!

மேட்டுப்பாளையம் சாலை

இலகுரக வாகனங்கள்

மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் துடியலூர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி சரவணம்பட்டி வழியாகவோ அல்லது GN Mill மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி KNG புதூர் வழியாகவோ அல்லது கவுண்டம்பாளையம் மேம்பாலத்தின் கீழே வலது புறம் திரும்பி இடையர்பாளையம் வழியாகவோ நகருக்குள் செல்லலாம்.

பேருந்துகள்

மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து நகருக்குள் வரும் பேருந்துகள் அனைத்தும், மேட்டுப் பாளையம் சாலை சங்கனூர் பிரிவு சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கண்ணப்ப நகர் வழியாக கணபதியை அடைந்து காந்திபுரம் செல்ல வேண்டும்.

காந்திபுரத்திலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகள் அனைத்தும் சத்தி ரோடு. கணபதி, சூரியா மருத்துவமனை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி மணியகாரம்பாளையம் வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம்.

மருதமலை, வடவள்ளி சாலை

மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து வரும் நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் லாலி ரோடு சந்திப்பில் வலதுபுறம் திரும்பி காந்திபார்க், தெலுங்குவீதி, ராஜவீதியை அடைந்து நகருக்குள் செல்லலாம்.

மருதமலை வடவள்ளி பகுதியிலிருந்து மேட்டுப்பாளையம் ரோடு செல்லும் அனைத்து வாகனங்களும் லாலிரோடு சந்திப்பில் இடதுபுறம் திரும்பி GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

உக்கடம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்

உக்கடம் பகுதியிலிருந்து ஒப்பணக்காரவீதி, பூமார்க்கெட், சிந்தாமணி, டி,பி ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி. பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி, சிவாலயா சந்திப்பு, ராமமூர்த்தி ரோடு சொக்கம்புதூர் வழியாகவோ அல்லது செட்டிவீதி, சலீவன் வீதி, காந்திபார்க் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு, GCT சந்திப்பு, கோவில் மேடு, தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவோ செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு கொடுத்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கேற்றவாறு தங்களது பயணத்தை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உபயோகமான, அவசர கதியில் கொடுக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பை அனைவருக்கும் ஷேர் செய்திடுங்கள்

விடை எங்கள் whatsapp சேனலில்: சேனலில் இணைய க்ளிக் செய்யவும்..

 

 

.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe