தங்கம் விலை சர்ர்ரென குறைவு!

published 11 months ago

தங்கம் விலை சர்ர்ரென குறைவு!

தேர்தல் முடிவடையும் முன் தங்கம் விலை ரூ.50,000ஐ தொடும் என்று எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில், அதன் விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது..

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி நிலவரத்தை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே ஏறுமுகமாக இருந்து வருகிறது; அவ்வப்போது விலை குறைந்தாலும், விலையேற்றம் தொடர்ந்து இருந்து வந்தது. இதனால் ஏழை,  நடுத்தர மக்கள் தங்கத்தை நினைத்துப் பார்க்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே தேர்தலுக்கு முன் தங்கம் பவுன் ரூ.50,000ஐ தொடும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை  வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.80 குறைந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாமல் இருந்தது. இதனிடையே இன்று மீண்டும் விலை குறைந்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.200 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6090க்கும் ஒரு பவுன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4989க்கும் ஒரு பவுன் ரூ.39,912க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 30 பைசா மட்டும் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80 க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,000க்கும் விற்பனையாகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe