தி.மு.க., நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிப்பு...!

published 11 months ago

தி.மு.க.,  நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிப்பு...!

கோவை: கோவை, பொள்ளாச்சி உட்பட 21 தொகுதிகளில் தி.மு.க., நேரடியாக போட்டியிடுவதாக அக்கட்சித்தலைமை அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கட்சிகளும் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போட்டியிடும் தொகுதிகளை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் தி.மு.க., தான் போட்டியிடும் தொகுதி விவரங்களை அறிவித்துள்ளது. தமிழகம், புதுவையில் 40 நாடாளுமன்ற தி.மு.க., 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. மற்ற தொகுதிகள் கூட்டணிக்கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

அதன்படி, தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் விவரம் பின்வருமாறு:

வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, காஞ்சிபுரம் (தனி), அரக்கோணம், வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, கோவை, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), ஸ்ரீபெரும்புதூர், பெரம்பலூர், தேனி, ஈரோடு, ஆரணி

ஆகிய 21 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிடுகிறது. 

கோவை, பொள்ளாச்சியில் நேரடியாக தி.மு.க., களம் காண்பதால் அடுத்த சில மாதங்களுக்கு இங்கு அரசியல் பேச்சுகள் அதிகம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe