கோவையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

published 11 months ago

கோவையில் மீண்டும் ஒரு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவையில் நேற்று ஒரேநாளில் அடுத்தடுத்து 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் நேற்று நடந்த ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிலையில், நேற்று ராமநாதபுரத்தில் உள்ள அல்வேனியா பள்ளிக்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையறிந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பள்ளிக்கு சென்று சோதனை நடத்தினர். பள்ளி வளாகம், வகுப்பறை, கழிவறை உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது வெடிகுண்டு மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்தது. தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த தகவல் கேள்விப்பட்டு பள்ளிக்கு வந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து சென்றனர்.

இந்த பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த அதே நேரத்தில் துடியலூர் எஸ்.எம்.பாளையத்தில் உள்ள வயலட் அன்னை மெட்ரிக் பள்ளிக்கும் இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

பள்ளி நிர்வாகத்தின் தரப்பில் துடியலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்ற போலீசார் பள்ளி முழுவதும் தீவிர சோதனை செய்ததில், வெடிகுண்டு எதுவும் இல்லை. புரளி என தெரியவந்தது. கோவையில் நேற்று ஒரேநாளில் அடுத்தடுத்து 2 பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்
https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நேற்று நடந்த மோடியின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சிக்கு ஏற்கனவே பாதுகாப்பு கருதி கோவை மாநகர போலீசார் அனுமதி மறுத்த நிலையில், 2 தனியார் பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த இ-மெயில் முகவரியை வைத்து மர்ம நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe