காமராஜர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: மோடி பேச்சு!

published 11 months ago

காமராஜர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்: மோடி பேச்சு!

சேலம்: சேலத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

பெண்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. நான் அவர்களுக்கு பாதுகாப்பு கேடயமாக இருக்கிறேன் அதற்கேற்ப பல திட்டங்களை கொண்டு வருகிறேன். இன்னும் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் 

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது திமுக.,வினர் அவர்களுக்கு பல கொடுமைகளைச் செய்தனர். அது தான் அவர்களின் உண்மையான முகம்.

பெண் சக்தி தான் எனக்கு பாதுகாப்பு. பெண்கள் தான் தான் பாஜ.க,வின் பாதுகாப்பு கவசமாக உள்ளனர்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல லட்சம் கோடியை அனுப்ப ஆர்வமாக இருக்கிறது பா.ஜ.க, அரசு. ஆனால் இங்குள்ள அரசு அதனை கொள்ளையடிப்பதில் குறியாக உள்ளது.

ஜி.கே.மூப்பனார் மனது வைத்திருந்தால் அன்றே பிரதமர் அந்தஸ்தை பெற்றிருக்கலாம், ஆனால் காங்கிரஸ் அவரை வளரவிடவில்லை. அரசியலில் நேர்மை என்றாலே காமராஜர் தான் என் நினைவுக்கு வருவார். அவர் எனது இன்ஸ்பிரேஷன்.

பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு மனுக்கள் பெட்டி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம் https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

சுப்பிரமணிய பாரதியார் சக்தியைப் பெண் வடிவில் வழிபட்டவர்; பாரத அன்னை என்று போற்றியவர். நானும் அவர் வழியிலேயே ஒரு சக்தி உபாசகனாக இருக்கிறேன்.

சக்தியின் தன்மையை அழிக்க நினைப்பவர்கள் அழிந்துபோன அடையாளங்கள் உள்ளன. இந்த தேர்தலில் தமிழகத்தில் இருந்து தான் அவர்களின் அழிவு தொடங்க உள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

முன்னதாக "பாரத அன்னை வாழ்க... என் அருமை தமிழ் சகோதர சகோதரிகளே வணக்கம்... இம்முறை 400க்கும் மேல்" என்று தமிழில் பேசினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe