வேட்பு மனு தாக்கல் நாளைய தினம் துவங்க உள்ள நிலையில் எல்லை கோடுகள் வரையப்பட்டன…

published 11 months ago

வேட்பு மனு தாக்கல் நாளைய தினம் துவங்க உள்ள நிலையில் எல்லை கோடுகள் வரையப்பட்டன…

கோவை: நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு சார்பில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நாளைய தினம்(20.03.2024) வேட்பு மனு தாக்கல் துவங்கி 27ம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து 28ஆம் தேதி வேட்புமனு மறுபரிசீலனை செய்யப்பட்டு, வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 30ஆம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

வேட்பு மனு தாக்கலை முன்னிட்டு எல்லை கோடுகள் வரையும் பணி இன்று துவங்கியது. கோவை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட உள்ளதால் ஆட்சியர் அலுவலகத்தை சுற்றிலும் 100 மீட்டர் 200 மீட்டர் இடைவெளிக்கு எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன. 

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து நஞ்சப்பா ரோடு செல்லும் சாலையிலும், ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையிலும், அவிநாசி சாலை செல்லும் வழியிலும் 100 மீட்டர் 200 மீட்டர் இடைவெளிக்கு எல்லை கோடுகள் வரையப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் இந்த குறிப்பிட்ட எல்லை வரை தொண்டர்களுடன் வரலாம், எல்லைக்கோடுகளை கடந்து வரும் பொழுது வேட்பாளர் குறிப்பிட்ட நபர்களுடன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe