கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்...

published 10 months ago

கோவையில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்...

கோவை: கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில், தென்னந்தோப்பு வைத்திருப்பவர் விவசாயி கார்த்தி. இவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்திலிருந்து கள் இறக்கியதாக கூறி துடியலூர் காவல்துறையினர் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று கோவை மதுவிலக்கு காவல்துறை விவசாயி கார்த்தியை கோவை புளியகுளம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இது குறித்து தகவல் அறிந்த நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர், கோவை புளியகுளம் காவல் நிலையத்தில் ஒன்று கூடினர். தென்னங்கள், நீரா பானம் இறக்குவது தங்கள் உரிமை என  விவசாயிகள் தெரிவித்தனர். 
இதனால் சிறிது நேரம் காவல் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

விவசாயிகளை சமாதானம் செய்த மதுவிலக்கு காவல் துறையினர், வழக்கு மட்டும் பதிவு செய்து விவசாயி கார்த்தியை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe