தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்ரிடெக் மேனிஃபெஸ்ட் 24 சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கம்...

published 10 months ago

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அக்ரிடெக் மேனிஃபெஸ்ட் 24 சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கம்...

கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Farming the future Engineering the Sustainable Agriculture என்ற தலைப்பில் அக்ரிடெக் மேனிஃபெஸ்ட் 24 என்ற சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு நடைபெற்றது. இதனை  வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்த கருத்தரங்கில் பொறியியல் துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்கான தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்…

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

இந்த சர்வதேச கருத்தரங்கமானது பல்வேறு நிறுவனங்களில் சிறப்பாக பணியாற்றும் இளம் பொறியியல் வல்லுநர்கள் நிலையான விவசாயத்தை அடைவதற்கான பொறியியல் தீர்வுகளை வழங்கினர். மேலும் நிகழ்வின் முக்கிய அங்கமாக மண் மற்றும் நீர் வளப் பாதுகாப்பு பொறியியல், பண்ணை இயந்திரவியல் மற்றும் ஆற்றல் பொறியியல், 

உணவு பதன்செய் பொறியியல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பொறியியல் ஆகியவற்றை உள்ளடக்கிய பதினான்கு கருப்பொருள் கொண்ட பகுதிகளில் கருத்தரங்கம் திட்டமிடப்பட்டு ஆன்லைன் மற்றும் நேரடி முறை மூலம் 375 ஆராய்ச்சிக்கட்டுரைகள் பெறப்பட்டன.

இதில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர். தமிழ்வேந்தன்  சிறப்புரையாற்றினார். வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர் முனைவர். அரவிராஜ்  வாழ்த்துரையாற்றினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe