தண்ணீர் கேன்களில் 'ஸ்டிக்கர்': கோவை மாவட்ட நிர்வாகம் செய்யும் நூதன பிரசாரம்!

published 10 months ago

தண்ணீர் கேன்களில் 'ஸ்டிக்கர்': கோவை மாவட்ட நிர்வாகம் செய்யும் நூதன பிரசாரம்!

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ,  100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதன் தொடர்ச்சியாக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக சுற்றுச்சுவரில்  100 சதவீத வாக்குபதிவு குறித்து வாக்காளர்களிடம் விழிப்பணர்வு ஏற்படுத்தும் வகையில் என்.ஜி.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களால் விழிப்பணர்வு ஓவியங்கள் மற்றும் வாசகங்கள் வரையப்பட்டது. 

நம்பர்.4 வீரபாண்டி பேரூராட்சியில் என் ஒட்டு, என் உரிமை குறித்த செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. மேலும், ஆனைமலை வட்டத்தில் ரமணி முதலிபுதூர், தென் சித்தூர், தென்சங்கம்பாளையம் நியாய விலை கடைகளின் முன்பு தேர்தல் விழிப்புணர்வு கோலங்கள், துண்டு பிரசுரம் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வ செய்யப்பட்டது.

ஷ்காலர் ஷிப்பில் படிக்க DJ Tuition குழுவில் இணையலாம்...

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

வாக்காளர்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கோயம்புத்தூர் ப்ரூக்பில்ட் மாலில் கையெழுத்து இயக்கம் மற்றும் செல்பி பாயிண்ட் அமைக்கப்பட்டது. மேலும், மேட்டுப்பாளையம் வட்டத்தில் தண்ணீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, வாக்களர்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், கோயம்பத்தூர் மாநகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரசீதுகளில் என்ஒட்டு என் உரிமை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe