கோவை அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த எம்.எல்.ஏக்கள்...

published 10 months ago

கோவை அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த எம்.எல்.ஏக்கள்...

கோவை: கோவை அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் வீடுவீடாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

கோவை நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனுக்கு ஆதரவாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நஞ்சுண்டாபுரம் பகுதியில் கோவை அதிமுக மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன் ஆகியோர் வீடுவீடாக இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு கேட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

 

முன்னதாக அப்பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டனர். அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமிற்கு கோவிலின் சார்பாக முதல்மரியாதை அளித்து பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

மேலும் பகுதிக்கழக செயலாளர்கள் சாரமேடு சந்திரசேகர், மற்றும் உலகநாதன் மேலும் கழக வார்டு செயலாளர்கள் உட்பட கழக தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம் க்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe