ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் எனக் கூறினால் எதற்கு தேர்தல் பத்திரம் வாங்கினார்கள்?- அண்ணாமலைக்கு கனிமொழி கேள்வி...

published 10 months ago

ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் எனக் கூறினால் எதற்கு தேர்தல் பத்திரம் வாங்கினார்கள்?- அண்ணாமலைக்கு கனிமொழி கேள்வி...

கோவை: தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை கூறிவரும் நிலையில் போதை பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆதரித்த பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கோவை அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர்,திமுக கூட்டனி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் கோவையில் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்பது பிரச்சாரத்தில் தெரிகிறது எனவும்  இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி இருக்கும் என்பதும் தெளிவாகியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.கடந்த மூன்றாண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்களுக்கு செய்திருக்கின்ற திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றிருக்கிறது என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டனியில் இருக்கும் இண்டி கூட்டனி ஒன்றியத்தில் உருவாக்க வேண்டும் பாஜக மீண்டும் எந்த பொறுப்புக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் கூறினார்.

நிச்சயமாக இந்த கூட்டணி வெற்றி இங்கு மட்டுமின்றி தமிழகத்தில்  போட்டியிடும் 40 இடங்களிலும் தெள்ள தெளிவாக இருக்கிறது என குறிப்பிட்ட அவர், ஆயுஷ்மான் திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரே பெயரில் 10 லட்சம் பயனாளிகளை இணைத்திருப்பதை போல் எங்களுக்கு தெரியாது என்றும் மகளிர் உதவி தொகையை ஒரு கோடியே 15 லட்சம் பெண்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் அந்த திட்டம் மக்களை சென்று சேர்ந்திருக்கிறது என்றும் சுட்டி காட்டினார்.

இதேபோல் காலை உணவு திட்டம் மக்களுக்கு பெரிய அளவில் சென்று இருக்கிறது என்றும் கூறினார்.மேலும் தமிழகத்தில்  போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதாக கூறிய அண்ணாமலையின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த கனிமொழி,போதைப்பொருள் தடுப்பு துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும்  அதற்கு ஒன்றிய உள்துறை அமைச்சரகம் தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்களுக்கு உதவுவதற்கு மாநில அரசு தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

குஜராத்தில் தான் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்  அந்த துறைமுகம் யாருடையது என்பது அனைவருக்கும் தெரியும் என்றும் குறிப்பிட்டார். இதைப்போல் கோவையில் பாஜக 60 சதவிகித வாக்குகள் பெற்று மிகப் பெரிய வெற்றியைப் பெறும் என்ற அண்ணாமலையின் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் 60 வாங்கலாம் 90% கூட வாங்கலாம் எனவும் கனவு காண்பது அவரது உரிமை ஆனால் வெற்றியை நிச்சயமாக எங்களதுவேண்டியனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஒரு பைசா கூட ஓட்டுக்கு செலவழிக்க மாட்டேன் என்று அண்ணாமலை கூறுகிறார் பின்னர் எதற்காக அவ்வளவு கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள் என்றும் அவர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் நாங்கள் யாருக்கும் காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் கிடையாது., முதலமைச்சர் திட்டங்களை நம்பித்தான் இங்கே வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe