நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

published 10 months ago

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்!

சென்னை: பிரபல நடிகர் டேனியல் பாலாஜி (வயது 48) மாரடைப்பால் காலமானார்.

காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் டேனியல் பாலாஜி.

இவர் திருவான்மியூரில் தனித்து வசித்து வந்துள்ளார். இதனிடையே அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது மறைவு செய்தியை அறிந்து இயக்குனர்கள் வெற்றிமாறன் கௌதம் மேனன் மருத்துவமனைக்கு நேரில் சென்று டேனியல் பாலாஜி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 

தொடர்ந்து அவரின் உடல் அவர் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் கொண்டு செல்லப்பட்டது. இதனிடையே டேனியல் பாலாஜியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe