கோவையில் உலக அமைதியை வலியுறுத்தி அகிம்சை மராத்தான்...

published 10 months ago

கோவையில் உலக அமைதியை வலியுறுத்தி அகிம்சை மராத்தான்...

கோவை: உலக அமைதியை வலியுறுத்தி,
ஜிடோ மகளிர் அமைப்பு சார்பில் கோவையில் நடைபெற்ற  அகிம்சை மராத்தானில் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர்.

 

ஜீடோ எனும்  ஜெயின் அகில உலக வர்த்தக அமைப்பானது உலகம் முழுவதும் கல்வி, பொருளாதார முன்னேற்றம்,, சமூக சேவை என்ற மூன்று இலட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு உலகம் முழுவதும் 28 சர்வதேச கிளைகளும் இந்தியாவில் 69 கிளைகளும் உள்ளன.

இந்நிலையில்,
அஹிம்சையின் தாயகம் இந்தியா என  சமாதானம், ஒற்றுமை, அன்பு ஆகியவற்றை வலியுறுத்தி கோவையில் ஜிடோ அமைப்பு கே.எம்.சி.எச்.மருத்துவமனை இணைந்து  அகிம்சா மாரத்தான் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை ஜிடோ மகளிர் பிரிவின் தலைவர் பூனம் பாப்னா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மாராத்தானை, ஐஎன்எஸ் அக்ரானி கமாண்டர்  மன்மோகன் சிங் மற்றும் மஹாவீர் நிறுவனத்தின் மஹாவீர்ஜி போத்ரா ஆகியோர்  கலந்துகொண்டு துவக்கி வைத்தனர்.

3 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ என  மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற இதில், ஈரோடு, ஊட்டி, குன்னூர், பெங்களூரு, கேரளா என பல்வேறு  பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என  ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்திய தரைப்படை, கப்பல் படை, விமானப் படை ஆகிய முப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் இதில் பங்கேற்று ஆதரவளித்தனர்.

இது குறித்து கோவை ஜிடோ மகளிர் பிரிவின் தலைவர்  பூனம் பாப்னா கூறுகையில்,அஹிம்சையை வலியுறுத்தி இந்த ஓட்ட நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறிய அவர்,ஏற்கனவே கடந்த ஆண்டு, உலக மக்கள் மேம்பாட்டுக்காவும்,அனைவருக்கும் கல்வி என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சி மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தியதாக கூறிய அவர்,தற்போது இரண்டாவது அகிம்சா ஓட்டம் உலக அளவில் நடைபெற்றுள்ளதாக கூறினார்.
 

ஜீடோ கோவை கிளை , மகளிர் அணி மற்றும்  இளைஞர் அணி ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியதாக தெரிவித்தார்..
இதில் வெற்றி பெற்ற பல்வேறு வயது பிரிவுகளைச் சேர்ந்த ஆண் பெண் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு சுமார் ரூ. 1.5 இலட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe