வருங்கால கணவருடன் வரலட்சுமி! தாய்லாந்தில் ஜாலி டூர்... புகைப்படங்கள் வைரல்!

published 10 months ago

வருங்கால கணவருடன் வரலட்சுமி! தாய்லாந்தில் ஜாலி டூர்... புகைப்படங்கள் வைரல்!

கோலிவுட் திரையுலகில்  கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'போடா போடி' படத்தில் வரலட்சுமி சரத்குமார்  நடிகையாக அறிமுகமானார்.

இமேஜ் பற்றி கவலைப்படாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளித்து அதற்கு ஏற்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர். ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களிலும்  நடித்து கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு பெற்றோர்கள், நண்பர்கள், நெருங்கிய  உறவினர்கள் மத்தியில் மும்பையை சேர்ந்த தொழில் அதிபரான நிகோலய் சச்தேவ் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. நிச்சயதார்த்தம் தொடர்பான அறிவிப்பு திடீரென வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது.  

இந்த நிலையில் நிகோலய் ஏற்கனவே திருமணமானவர் என்றும், அவருக்கு ஒரு மகள் இருக்கிறார் என்றும்  சிலர் சர்ச்சைகளை கிளப்பி இருந்த நிலையில், வரலட்சுமி சரத்குமார் அதற்கு 'என்னைப்பற்றி யார் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன்' என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிலடி கொடுத்திருந்தார்.

தற்போது இவர், தனது வருங்கால கணவருடன் டூர் சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வரலட்சுமி சரத்குமார், நிகோலய் இருவரும் தாய்லாந்து டூர் சென்று ஜாலியாக தங்களது வெகேஷனை கழித்து வருகின்றனர். இவர்களது போட்டோஸ் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe