கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை 'பீஸ்ட்' பார்க்க வைத்த விஜய் ரசிகர் - VIDEO

published 2 years ago

கோவையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளை 'பீஸ்ட்' பார்க்க வைத்த விஜய் ரசிகர் - VIDEO

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தை பார்க்க ஆசைப்பட்ட கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகளை, விஜய் ரசிகர் ஒருவர் திரையரங்கம் அழைத்துச்சென்று மகிழ்வித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் திரைப்படம் வரவேற்பைப் பெற்றதுள்ளது. இந்நிலையில் கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் பீஸ்ட் படம் பார்க்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த விஜய் ரசிகரும் தன்னார்வலருமான நவீன் ரோஷன் என்பவர் மாற்றுத்திறனாளி இல்லத்தில் வசித்து வரும் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளை, தனது சொந்த செலவில் படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள அரசன் திரையரங்கில் பீஸ்ட் படம் பார்த்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் தன்னை மறந்து மகிழ்ச்சியாக கை தட்டி ஆரவாரம் செய்தனர். இது காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது.

VIDEO LINK

https://www.youtube.com/watch?v=CTeXrH5izCQ
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe