கோவை, திருப்பூர் மக்களே... மருதமலை கோயிலில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்... ரூ.58,000 வரை ஊதியம்!

published 10 months ago

கோவை, திருப்பூர் மக்களே... மருதமலை கோயிலில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்...  ரூ.58,000 வரை ஊதியம்!

மருதமலை முருகன் கோயிலில் காலி  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம் பேரூர் அருகே பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் அலுவலக உதவியாளர், பிளம்பர், டிக்கெட் சேல்ஸ் கிளர்க், ஹாஸ்டல் கண்காணிப்பாளர் என பல்வேறு பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.  

வேலை வாய்ப்பு அறிவிப்பு

டிக்கெட் விற்பனை எழித்தாளர் (1 பணியிடம்), அலுவலக உதவியளார் (2), ஓட்டுநர் (5), பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர் (1), காவலர் (4), திருவலகு (2), விடுதி காப்பாளர் (1), பல வேலை (1), மினி பஸ் கிளீனர் (1) என 19 பணியிடஙகள் நிரப்பப்படுகின்றன.  மேலும் உப கோயிலான கரிவதரதராஜ திருக்கோயில், வடவள்ளி கோயிலில் ஒரு காவலர் பணியிடம் மற்றும் ஒரு திருவலகு பணியிடம் நிரப்பப்படுகின்றன. மொத்தமாக 21 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடைசி தேதி

இந்த பணியிடங்களுக்கு 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக மாதம் ரூ.58,600 வரை வழங்கப்படும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2024.


டிக்கெட் விற்பனை எழுத்தர்

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600


அலுவலக உதவியாளர்

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400


காவலர்

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400


திருவலகு

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400


விடுதிக் காப்பாளர்

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400


பலவேலை

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400


ஓட்டுனர்

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600


பிளம்பர் கம் பம்ப் ஆபரேட்டர்

கல்வித் தகுதி : குழாய் தொழில் அல்லது குழாய் பணியர் பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும். 2 வருட தொழில் பழகுநர் பயிற்சி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000 – 56,900


மின் உதவியாளர்

கல்வித் தகுதி : மின் பணியாளர் பாடப்பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,600 – 52,400


மினி பஸ் கிளீனர்

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,700 – 50,000


உபகோயில் அருள்மிகு கரிவரதராஜபெருமாள் கோயில் பணியிடங்கள்

காவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800


திருவலகு

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000 – 31,500

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கு https://marudhamalaimurugan.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் பிரிண்ட் எடுக்க வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

துணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மருதமலை, பேரூர் வட்டம், கோவை மாவட்டம் - 641016.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe