ரோபோ சங்கர் மகள் திருமணம்; பரிசு பெட்டியை பிரிக்க பொங்கி வழியும் தங்கம், வெள்ளி!

published 10 months ago

ரோபோ சங்கர் மகள் திருமணம்; பரிசு பெட்டியை பிரிக்க பொங்கி வழியும் தங்கம், வெள்ளி!

ரோபோ சங்கர் மகள் இந்திரஜா சங்கர் திருமணம் சமீபத்தில் மதுரையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று முடிந்தது. ரிஷப்ஷன் பிரம்மாண்டமாக சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் பல திறை பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தனர்.  

இந்திரஜா சங்கர் மற்றும் கார்த்திக் ஜோடியின் திருமண நிகழ்ச்சி வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவின. மேலும் இந்த குடும்பத்தினர் திருமணம் மற்றும் அவர்கள் கடந்து வந்த பாதைகள் பற்றியும் பகிர்ந்து இருந்தனர்.

திருமணம் மற்றும்  வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல சினிமா பிரபலங்கள் விலை உயர்ந்த பரிசு பொருட்களை பரிசாக கொடுத்துள்ளனர். தற்போது அந்த பரிசுப் பொருட்களை பிரித்துப் பார்க்கும் வீடியோ வெளியாகி ரசிகர்களை ஆச்சரியத்தில்  ஆழ்த்தியுள்ளது.

ரோபோ சங்கர் தனது மகள் திருமணத்திற்கு  ஏகப்பட்ட பணத்தை செலவழித்து  நடத்தி வைத்தார். 15 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா எலிவேட் சொகுசு கார் ஒன்றையும் பரிசாக வழங்கி உள்ளார். இந்த கார் வாங்கும் வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டு வைரலாகி இருந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு 9 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் வந்துள்ளனர். திருமணத்துக்கு வந்த பலரும் விலை உயர்ந்த பொருட்களை வழங்கி சென்ற நிலையில் ஒரு அறை முழுக்க பரிசு பொருட்கள் நிரம்பியுள்ளது.

அதனை பிரித்துப் பார்க்கும் வீடியோவை இந்திரஜா மற்றும் கார்த்திக் தம்பதியினர் வெளியிட்டுள்ளனர். இதில் இவர்களின் உருவம் பொறித்த தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.  மேலும், தங்கம் மற்றும் வெள்ளியினால் ஆன பரிசு பொருட்களையும்  மணமக்களுக்கு வழங்கி உள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe