கோவை மக்களுக்காக மேலும் 3 நாட்களுக்கு ரூ.101க்கு ஸ்மார்ட் போன்..! : நிறுவனம் அறிவிப்பு..!

published 2 years ago

கோவை மக்களுக்காக மேலும் 3 நாட்களுக்கு ரூ.101க்கு ஸ்மார்ட் போன்..! : நிறுவனம் அறிவிப்பு..!
கோவை: கோவையில் உபயோகப்படுத்தப்பட்ட ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள ஸ்மார்ட் போனை வாங்குபவருக்கு ஒரு புதிய ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று பிக் அறுவிக்கப்பட்ட நிலையில் இந்த சலுகை மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவ நாகரீகம் வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் உபயோகப்படுத்தாதவர்களே இல்லை என்று கூறும் அளவுக்கு மனிதனின் மூன்றாம் கைபோல் மாறிவிட்டது ஸ்மார்ட் போன்கள். தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்பட்டு வந்த தொலைபேசிகள் தற்போது ஸ்மார்ட் வடிவில் மனிதனின் பல்வேறு வேலைகளையும் சுலபமாக்குகின்றன. இப்படியான அத்தியாவசிய பொருளாக மாறிப்போன ஸ்மார்ட் போன்கள் சந்தைகளில் ரூ.5 அயிரம் முதல் லட்சங்களில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கோவையில் துவங்கப்படும் செல்போன் கடை ஒன்றில் வெறும் 101 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காந்திபுரம் 9வது வீதியில் உள்ள பிக்சல் கம்யூனிகேஷன் என்ற செல்போன் கடை கடந்த 13ம் தேதி துவங்கப்பட்டது. திறப்பு விழா சலுகையாக இந்த கடையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு செல்போனை வாங்குபவர்கள் 101 ரூபாய் செலுத்தி புதிய ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து முதல் நாளில் இந்த கடையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த சலுகை முதல் நாளோடு முடிந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் வரும் திங்கட்கிழமை வரை மூன்று நாட்களுக்கு சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களுக்கு 74184878487, 9003336461என்ற எண்ணை அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe