டெல்லி போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் விவசாயினுடைய அஸ்தி கலசம் கோவைக்கு கொண்டுவரப்பட்டது...

published 10 months ago

டெல்லி போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட பஞ்சாப் விவசாயினுடைய அஸ்தி கலசம் கோவைக்கு கொண்டுவரப்பட்டது...

கோவை: வேளாண் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம்; பயிா்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாபில் இருந்து டெல்லியை நோக்கி பேரணியாகப் புறப்பட்ட விவசாயிகளை ஹரியானா அரசு எல்லையில் தடுத்து நிறுத்தியது. 

 

பஞ்சாபின் கனெளரி எல்லையிலிருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியைத் தொடங்கியபோது அவா்கள் மீது ட்ரோன் மூலம் கண்ணீா்ப் புகைக் குண்டுகளை ஹரியாணா போலீஸாா் வீசினா். அப்போது ஏற்பட்ட மோதலில் 21 வயதான விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்தாா்.

 

விவசாயி சுப்கரன் சிங் மரணத்துக்கு நீதி கேட்டும், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மரியாதை செலுத்தவும் கிசான் மஜ்தூர் மோர்ச்சா அமைப்பின் சார்பில் சுப்ரகன் சிங்கின் அஸ்தி கலசம் நாடு முழுவதும் யாத்திரையாக கொண்டு செல்லப்படுகிறது. 

அதன்படி இன்று கோவை விமான நிலையம் வந்தடைந்த சுப்ரகன் சிங்கின் அஸ்திக்கு ஜனநாயக முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்வில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், புரட்சிகர இளைஞர் முன்னணி நிர்வாகிகள் வே.ஆறுச்சாமி, தமிழ் புலிகள் கட்சியின் இளவேனில், தமிழக விவசாயிகள் சங்கத்தின் சண்முகசுந்தரம் என பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe