கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் குறைந்த விலையில் முழுஉடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்…

published 10 months ago

கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் குறைந்த விலையில் முழுஉடல் பரிசோதனை திட்டம் அறிமுகம்…

கோவை: உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 

அனைத்து இடங்களிலும் அனைவருக்கும்தரமான சுகாதார சேவைகளை பெறுவதற்கான உரிமையை பெறுவதற்காக இந்த ஆண்டு “எனது ஆரோக்கியம், எனது உரிமை” என்ற கருப்பொருளை முன்னெடுத்துள்ளது.  

இதனை முன்னிட்டு கோவை ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில்  உலக சுகாதார தினம் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு டாக்டர். ஆதித்யன் குகன் தலைமை தாங்கினார். தொடர்ந்து முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 2  முழு உடல் பரிசோதனை திட்டங்களின் பெறப்படும் நன்மைகள் பற்றி விளக்கினார்.  

அப்போது பேசிய அவர் “ஒரு மருத்துவராகவும், தனி மனிதனாகவும், சிகிச்சையை விட வருவதற்கு முன் தடுப்பதே சிறந்தது என்பதை  நான் உறுதியாக நம்புகிறேன். எனவே, AGS ஹெல்த்கேர் உருவானது முதல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் முதன்மையான சுகாதாரப் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதில் நான் முழுமையாக கவனம்செலுத்தி வருகிறேன்.

மாஸ்டர் ஹெல்த் செக்அப் பற்றிய போதிய விழிப்புணர்வுடன்,ஆரோக்கியத்தைப் பற்றி விழிப்புணர்வோடு, சமூகத்தை ஆரோக்கியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் ஒரு சமூகம் உருவாகும் என்று நான் கருதுகிறேன், என்றார். 

மேலும் இந்த 76வது உலக சுகாதார தினத்தன்று, மக்களை எளிதாக சென்றடையும் வகையில் இரண்டு மிகவும் குறைந்த விலையில்   முழு உடல் பரிசோதனை திட்டங்களை அறிமுகப்படுத்துகிறோம்.

முதல் பரிசோதனை திட்டமானது இரத்தம், சிறுநீர், இமேஜிங்மற்றும் பல ஆலோசனைகளுடன் கூடியஇந்தியாவின் மிகவும் மலிவு விலையில்தலை முதல் கால் வரைவிரிவான முழு உடல் பரிசோதனையை  இங்கே நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்,ரூ. 6000 மதிப்புள்ள இந்த பரிசோதனைகள் அனைத்தும்  76வது உலக சுகாதாரதினத்தை முன்னிட்டு ரூ. 600/- க்கு முழு உடல்பரிசோதனை செய்யப்படுகிறது.  மேலும் முதல் 50 பதிவுகளுக்குஇலவச மல்டி வைட்டமின் / புரோட்டீன்சாச்செட்டுகள் கூடுதலாக வழங்கப்படும். இந்தசலுகை விலை பரிசோதனை திட்டமானது  ஏப்ரல் 7முதல் 13 வரை செல்லுபடியாகும்,என்றார். 

இரண்டாவது திட்டம் ஒரு வருடத்திற்கான நீண்டகாலத் திட்டமாகும், இது குழு முன்பதிவுகள் (Bulk booking), அடுக்குமாடிகுடியிருப்புகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மிகவும் மலிவு விலையில் \ தலை முதல் கால் வரைமுழு உடல் பரிசோதனை திட்டமாகும். ஒரே நேரத்தில் 10 பேருக்கு மேல் முன்பதிவு செய்தால் ரூ.7,500 மதிப்புள்ள  இந்தபரிசோதனை ரூ. 3750 க்கு  பெறமுடியும். 

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இந்த முன்முயற்சியானது முழு உடல் பரிசோதனையின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே ஆகும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச ஹோம் டெலிவரியுடன் உள்ள மருந்தகமான 63 டிரக்மார்ட் பார்மசியில் இருந்து வாங்கப்படும் மருந்துகளுக்கு 15% தள்ளுபடியும், மற்ற ஆய்வக சோதனைகள் மற்றும் இமேஜிங்கில் 50% தள்ளுபடியும் வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.  

இரண்டு பேக்கேஜ்கள் பற்றிய மேலும் விவரங்களுக்கு +919626055556. அல்லது [email protected] மின்னஞ்சல் மூலம் அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe