கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என அண்ணாமலை வாக்குறுதி - விவசாயிகள் சங்கம் பாஜகவிற்கு ஆதரவு...

published 10 months ago

கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என அண்ணாமலை வாக்குறுதி - விவசாயிகள் சங்கம் பாஜகவிற்கு ஆதரவு...

கோவை: பாராளுமன்ற தேர்தலையொட்டி தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் விதமாக கோவையில் நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தினர் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளனர்.

நாம் தேசிய விவசாயிகளின் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்றது.மாநிலத் தலைவர் பிரபுராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்னை விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக தென்னை, பனை மரங்களில் இருந்து விவசாயிகள் கள் இறக்கவும், ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் விநியோகிக்கவும் , விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பாஜக வேட்பாளர் அண்ணாமலை உறுதியளித்துள்ளதாகவும் வரும் பாராளுமன்ற தேர்தலில் முழுமையாக விவசாயிகள் பாஜகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில தலைவர் பிரபுராஜா தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் குருசாமி, மாநில பொருளாளர் முத்து சிவன்,மாநில பொதுச் செயலாளர் ராஜேந்திரன், மாநில துணைத்தலைவர் நரேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாநில அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாநிலத் துணைச் செயலாளர் துரைராஜ், செல்வராஜ், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் நடராஜன், கோவை மண்டல செயலாளர் வரதராஜன், உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe