கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி சிறுதானியங்களை கொண்டு விழிப்புணர்வு- அசத்திய மகளிர் சுய உதவிக்குழுவினர்…

published 10 months ago

கோவையில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி  சிறுதானியங்களை கொண்டு விழிப்புணர்வு- அசத்திய மகளிர் சுய உதவிக்குழுவினர்…

கோவை: பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் தேங்காய் நாரினைக்கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு விழிப்புணர்வு சின்னத்தினையும் மற்றும் வேளாண்மைத் துறையின் சார்பில் சிறுதானியங்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதையும் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டார்.

 

பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் 18வயது பூர்த்தியடைந்த அனைவரும் 100 சதவிகித வாக்குப்பதிவை செலுத்திட வலியுறுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நமது மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை அடைய மாவட்ட நிர்வாகம் / மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு விளம்பர
பதாகைகள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையெழுத்து இயக்கங்கள். குறும்படங்கள், விழிப்புணர்வு பேரணிகள், ரங்கோலி கோலங்கள், ராட்சத பலூன், டி சர்ட் தொப்பி, சுவர் ஓவியங்கள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

 

அதன்படி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி வேளாண்மைத் துறையின் சார்பில் சிறுதானியங்களை கொண்டு உருவாக்கப்பட்டிரு தது. இந்த ஓவியங்கள் மைசூர் பருப்பு, சோளம், பாசிபயறு, சோயாபீன்ஸ், நெல், கொள்ளு, கம்பு, வெந்தயம். ராகி கருஞ்சீரகம், எள். கடுகு. உள்ளிட்ட சிறுதானியங்களை கொண்டு உருவாக்கப்பட்டியிருந்தன. மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகைதரும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில், மகளிர் திட்டம் சார்பில் தேங்காய் நாரினைக்கொண்டு தயார் செய்யப்பட்டுள்ள வாக்குப்பதிவு விழிப்புணர்வு சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட் வளாகத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி வேளாண்துறையின் சார்பில் காய்கறிகளினால் உருவாக்கப்பட்ட விழிப்புணர்வு வாசங்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் உறுதி மொழியினை எடுத்துக்கொண்டனர். தொண்டாமுத்தூர். தீனம்பாளையத்தில், 100% வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மேலும், கள்ளிநாயக்கன்பாளையம் பகுதியில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe