கோவையில் இந்திய வரைபடம் போல் பிரம்மாண்டமாய் நின்ற மாணவர்கள்!

published 10 months ago

கோவையில் இந்திய வரைபடம் போல் பிரம்மாண்டமாய் நின்ற மாணவர்கள்!

கோவை: கோவை  மாவட்டத்தில் 100 சதவீத வாக்கு பதிவை வலியுறுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடத்தப்பட்டு வருகின்றன.

 

இதன்  ஒரு பகுதியாக கோவை சரவணம்பட்டி பகுதியில் பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில்   நூறு  சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் மாணவ,மாணவிகள் இந்திய வரைபடம் போல அணிவகுத்து நின்றனர். 

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள்,ஒரு விரல் மை மையமாக வைத்து இந்திய வரைபடம் போல அணிவகுத்து நின்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனை பார்வையிட்ட, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,
கையெழுத்து இயக்கத்தினை  துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின்  கடமை என மாணவ, மாணவிகள்  உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்,கல்லூரிகளில் முதல் முறை வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் கல்லூரிகளில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அதிக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதாக கூறிய அவர், மாவட்டத்தில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கும் விதமாக கடந்த முறை வாக்கு பதிவு குறைந்த இடங்களில் அதிக கவனம் செலுத்தி வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்..இந் நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள்  டாக்டர் தங்கவேலு ,அக்‌ஷய் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe